02 January 2017

🕋 ஹஜ் 2017/1438 🕋 ஒரு கண்ணோட்டம்



✈ இவ் வருடம் அதாவது
ஹிஜ்ரீ 1438 = 2017 க் கான ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் அதாவது  HAF = Haj Application Form  இன்ஷா அல்லாஹ் 2/1/2017 திங்கள்கிழமை முதல் வினியோகம்  / வழங்க ப்பட உள்ளது .

✈ HAF = அதாவது ஹஜ் விண்ணப்பங்களை
1- 13/7 ரோசி டவர்
     நுங்கம்பாக்கம் ,  சென்னை - யில் நேரிலோ
          ...... அல்லது
2- www.hajcommittee.gov. in
    என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ.....
          ....... அல்லது
3- ஆன் லைன் மூலமாக வோ
விண்ணப்பிக்கலாம் .

✈ 2017/1438 ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
    📓 24/01/2017 - க்கு முன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
    📓  28/02/2018 வரை EXPIRY உள்ள பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .

    📓 Machine Readable - எனும் புதிய வகை பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .

✈ ஒரு ஹாஜி க்கு 300/- வீதம் திருப்பி அளிக்க முடியாத சேவை தொகை ( non Refundable Processing Fee ) செலுத்த வேண்டும்  .

✈  ஒரு கவரில் 5 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .


✈  ஹஜ் - க்கு செலுத்த வேண்டிய அனைத்து பரிவர்த்தனை களை  SBI அல்லது UBI ல் மட்டுமே செலுத்த வேண்டும் .

✈ DD அல்லது CHEQUE ஏற்றுக் கொள்ள முடியாது .

✈ கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து ( அதாவது 2014/15/16 ) ஹஜ் யாத்திரை க்காக விண்ணப்பித்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படாதவர்கள் ,  இம்முறை குலுக்கல் இன்றி தேர்வு செய்ய ப்படுவார்கள் -  ( அதாவது 4 th time எனும் Reserve Categories)


✈ 2/01/2017 -  அன்று 70 வயது பூர்த்தி யானவர்கள் மற்றும் அவருடன் இணைந்து செல்ல இரத்த பந்த உறவு உள்ள ஒரு துணை ( Campanian ) - குலுக்கல் இன்றி தேர்ந்தெடுக்க படுவார்கள்  -  அதாவது ( 70+ )

✈📓 உங்கள் பாஸ்போர்ட் நகலுடன் Xerox -  விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி தேதி  = 24/01/2017

              ☄☄☄☄

2017 ஹஜ் விண்ணப்பம் உடன் கண்டிப்பாக இணைக்க ப்பட வேண்டிய சான்று கள்  - ( Enclosure )

1- 📝 பாஸ்போர்ட் நகல்
           Valid Passport Xerox
2- 📝 முகவரி சான்று .
           Address

3- 📝 இரத்து செய்ய ப்பட்ட வெற்று காசோலை .
           Canceled Bank Check

4- 📝 SBI அல்லது UBI வங்கி  யில் 300/- பணம் கட்டிய ரசீது -  நகல் .
            300/- Bank Challan

5- 📝 பொதுவகை {அ} General
           4th Timer...{அ}
           70 +............{அ}
  ஆகியோருக்கான சான்றிதழ் எனும் அஃபிடவிட்
            Affidavits

✈ விண்ணப்பம் அளிக்கும் ஹாஜி களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ .
         Passport size Color Photo

           📩  -   📩  -  📩

✈ விண்ணப்பங்கள்
      தமிழ்நாடு ஹஜ் கமிட்டி - சென்னைக்கு சமர்பிக்க வேண்டும் .

✈ கடைசி தேதி
       24/01/2017  ஆகும்  .

          ☄☄☄☄☄
அட்ரஸ்  / விலாசம்

📩 தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
       13/7 முதல் தளம் ,  ரோசி டவர்
        { நுங்கம்பாக்கம் ஹை ரோடு }
        மகாத்மா காந்தி ரோடு
       சென்னை

         044-28252519
         044-28227617

             🕋☄🕋☄🕋

Issued for Public Awareness
-  பொது நலம் கருதி வெளியிடப்படுகிறது

13 November 2016

பெண்ணினத்திற்கு இஸ்லாம் தரும் கண்ணியம்

பெண்களை பற்றி உலகில் உள்ள பல்வேறு மதங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்து பார்த்தால், இஸ்லாம் தவிர உள்ள மற்ற கொள்கைகள் பெண்களை எவ்வளவு இழிவாக மதிக்கிறது என்பதையும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதே வேளையில் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு கண்ணியம் தருகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்.



பெண்களைப் பற்றி பிறமதங்கள், கொள்கைகள்

*அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு*

*பெண் புத்தி பின் புத்தி*

*ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே*’

04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.
பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர்.

 அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது.

இது போன்ற ஏராளமான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

*பெண்ணினத்திற்கு இஸ்லாம் தரும் கண்ணியம்.*

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)

*அவனே உங்களை ஒரே

29 October 2016

பிற மதத்தவர்களிடம் அன்பு


மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மகத்தான நற்பண்பு பிற மதத்தவர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை எனலாம்.
பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே கருதுவது வழக்கம். அது போல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர் ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தால் அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார்.
ஏற்கனவே தமக்குக் கொடுமைகள் புரிந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் என்றால் அவர் தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். உலக வரலாற்றில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை அவர்கள் சம்பாதித்திருந்தனர். அந்த எதிரிகள் மூலம் ஏராளமான கொடுமைகளையும் சந்தித்தனர். பல தோழர்கள் எதிரிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். ஊரை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். இத்தகையோர் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு சீக்கிரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
அவர்களைப் பழிவாங்கியிருந்தால் அதை யாரும் குறை காண முடியாத அளவுக்கு அதற்கு நியாயங்கள் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. முஸ்லிமல்லாத மக்களுடன் நட்புறவுடனேயே அவர்கள் பழகி வந்தனர்.
முஸ்லிமல்லாத மக்களுடன் அவர்கள் நடந்து கொண்ட முறைக்கு

13 April 2016

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
இஸ்லாம் என்பது அல்லாஹ் விற்குச் சொந்தமான மார்க்கமாகும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்,
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (3:9)
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிட மிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (3:85)
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதன் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (12:40)
இறைவனுக்கு மட்டுமே சொந்த மான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.
(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்! (18:27)
இது அகிலத்தாரின் இறைவனிட மிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (70:43-48)
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் "இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!'' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! (10:15)
நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்க மாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளான்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66:1)
என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
மேலும் பத்ருப் போர் கைதிகள் விஷயமாக நபியவர்கள் சுய முடிவு எடுத்த நேரத்திலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்குப் போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது, ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்தி தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
இறைத்தூதரும் கூட இறை வனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதையே இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர் களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறை வாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3)
(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (6 :106)

தன்மானம் காத்த தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத அமைப் பாகும். சாதாரண பஞ்சாயத்து போர்டு தேர்தலிலிருந்து பாரளுமன்றத் தேர்தல் வரை எதிலும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை அது எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகின்றது.
ஆனால் அதே சமயம் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்து மாறி மாறி அதிமுக, திமுக என்று ஆதரவு தெரிவித்து வந்தது. தவ்ஹீத் கொள்கைக்குப் பாதகமும், பழுதும் வந்து விடக் கூடாதென்று தங்களைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வட்டங் களையும், வளையங்களையும் போட்டுக் கொண்டு களப் பணியும் ஆற்றியது.
1. ஆளுங்கட்சி அல்லது எதிர்க் கட்சிகளின் மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏறக் கூடாது.
2. அரசியல் கட்சியினர் யாரும் நமக்குப் பொன்னாடைகள் போர்த்தக் கூடாது; மலர் மாலைகள் அணிவிக்கக் கூடாது; நாமும் அரசியல் தலைவர் களுக்கு இவற்றை அணிவிக்கக் கூடாது.
3. அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வரும் போது மரியாதைக் காக எழுந்து நிற்கக் கூடாது.
4. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் தங்கள் செலவில் நமக்கு மேடைகள் அமைத்துத் தர வேண்டும். அந்த மேடையில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்கலாம்.
5. தேர்தல் பிரச்சாரத்திற்கான போக்குவரத்து, விளம்பரங்கள் போன்ற அனைத்துச் செலவுகளையும் அரசியல் கட்சிகளே செய்ய வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து செலவுக்குப் பணம் தருகின்ற பட்சத்தில் செலவு போக மீதப் பணத்தை அந்தக் கட்சி வேட்பாளர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.
6. தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சியினருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
7. உள்ளூர் பகுதியில் வேட்பாளர் களிடம் வாங்கிய பணத்திற்கு முறையான கணக்கு வழக்குகளை தலைமைக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு எடுக்கப்படும்.
இதுபோன்ற எண்ணற்ற பாதுகாப்பு வட்டங்களும் வளையங்களும் ஏன்? எதற்கு?
அரசியல்வாதிகளிடம் வார்த்தைக்கு வார்த்தை வணக்கம் என்பது சர்வ சாதாரணமாக மூச்சுக்கு முன்னூறு தடவை வரும். அவர்களை அறியாமலேயே கைகள் யாரைக் கண்டாலும் கும்பிடு போட்டுத் தொழும். தனி மனித புகழ், துதி பாடல் கொடி கட்டிப் பறக்கும். மொத்தத்தில் அரசியல்வாதிகளை ஷிர்க் எனும் இணை வைப்பு ஆக்கிரமித்து நிற்கும்.
இதுபோன்ற கட்டத்தில் தவ்ஹீது வாதி இந்த இணைவைப்பில் விழுந்து விட்டால் கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாகி விடும். அதாவது ஏகத்துவம் என்ற உயிரினும் மேலான கொள்கையை, கண்ட கிரயத்திற்கு விற்று விட்டு இட ஒதுக்கீட்டை வாங்குகின்ற கதையாகி விடும். அதனால் தான் இத்தனை தடுப்புச் சுவர்கள்! தடை அரண்கள்!
அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். ஒரு சிலரைத் தவிர மீதி ஜமாஅத் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி, செலவு செய்த மிச்ச மீதப் பணத்தை வேட்பாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதைப் பார்த்த வேட்பாளர்கள், "இந்தக் காலத்தில் இப்படி நாணயத்திற்கும் நம்பிக்கைக் கும் உரியவர்கள் இருக்கின்றார்களா?'' என்று வினாக்குறிகளுடன் விழிப் புருவங்களை உயர்த்தி வியப்பில் உறைந்து போயினர்.
இவ்வளவுக்குப் பிறகும் "தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' என்று நம்முடைய நாணயத்தை எதிரிகள் கொச்சைப் படுத்தினர்.
ஹஜ் சர்வீஸ், வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகின்ற ஏஜண்ட் தொழில்,

05 September 2015

இப்ராஹீம் நபியின் மன உறுதி _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 4--9--15--அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோதரர் முகம்மது அலி ஜின்னா இப்ராஹீம் நபியின் மன உறுதி என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

03 September 2015

பெண்கள் குர் ஆன் வகுப்பு _உடுமலைகிளை

உடுமலைகிளையில் 03- 09 -15  அன்று பெண்கள் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

வீண்பேச்சு சபையில் அமராதீர் _ உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில். 3--9--15- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர் அப்துல்லாஹ் வீண்பேச்சு சபையில் அமராதீர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

02 September 2015

தூதர்களும், பாதுகாவலர்களும் _உடுமலைகிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 2--9--15--அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோதரர் முஹம்மது அலி ஜின்னா தூதர்களும், பாதுகாவலர்களும், என்ற தலைப்பில் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்

01 September 2015

மறுமைநாள் _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 1--9--15--அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ,அப்துல்லாஹ் மறுமைநாள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

31 August 2015

பெண்கள் குர் ஆன் வகுப்பு உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில்31--8--15-அன்று பெண்கள் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

27 August 2015

அல்லாஹ்வின் வார்த்தைகள் _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில்27--8--15 அன்று சுபுஹுக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர் அப்துல்லாஹ் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

25 August 2015

மறுமையில் விசாரணை _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 25--8--15-அன்று சுபுஹுக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோதரர் அப்துல்லாஹ் மறுமையில் விசாரணை என்ற தலைப்பில் விளக்கமளித்தார் அல்ஹம்துலில்லாஹ

இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 25.08.2015 அன்று ஒரு சகோதரிக்கு தாவா செய்து அவரது குழந்தையிடமிருந்த  இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

24 August 2015

இறுதித்தூதர் _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்ம் உடுமலைகிளையில் 24--8--15 அன்று சுபுஹுக்குப.பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ,அப்துர்ரஹ்மான் இறுதித்தூதர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார் அல்ஹம்துலில்லாஹ்